மோடிக்கு நன்றி தெரிவித்து ம.ஜ.த., கட்சி தலைவர் தேவகவுடா கடிதம்
மோடிக்கு நன்றி தெரிவித்து ம.ஜ.த., கட்சி தலைவர் தேவகவுடா கடிதம்
மோடிக்கு நன்றி தெரிவித்து ம.ஜ.த., கட்சி தலைவர் தேவகவுடா கடிதம்
ADDED : ஜூன் 09, 2024 03:27 PM

புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இடம் தருவதற்காக, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(ஜூன் 09) இரவு 7.15 மணிக்கு நடக்கும் விழாவில், பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்க உள்ளார். பிரதமர் உடன் இன்று 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., வேட்பாளராக மாண்டியாவில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நன்றி
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்ததற்கு நன்றி தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தேவகவுடா கூறியிருப்பதாவது:
''உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியாது. மத்திய அமைச்சரவையில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இடம் தருவதற்கு நன்றி. மத்திய கூட்டணி அரசில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவர்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.