Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஒரு லட்சம் பழங்குடியினருக்கு வீடு கட்ட... ரூ.540 கோடி முதல் தவணையை வழங்கினார் பிரதமர்

ஒரு லட்சம் பழங்குடியினருக்கு வீடு கட்ட... ரூ.540 கோடி முதல் தவணையை வழங்கினார் பிரதமர்

ஒரு லட்சம் பழங்குடியினருக்கு வீடு கட்ட... ரூ.540 கோடி முதல் தவணையை வழங்கினார் பிரதமர்

ஒரு லட்சம் பழங்குடியினருக்கு வீடு கட்ட... ரூ.540 கோடி முதல் தவணையை வழங்கினார் பிரதமர்

ADDED : ஜன 16, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : பிரதமர் பழங்குடியின வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக ஒரு லட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர்

நரேந்திர மோடி நேற்று வழங்கினார். ''அரசின் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்'' என அவர் கூறினார்.

பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக பிரதமர் பழங்குடியின நலத்திட்டம் கடந்த நவ. 15ல் துவங்கப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கான பாதுகாப்பான வீடுகள் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் சிறப்பான கல்வி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மின்சாரம் சாலை மற்றும் தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் தொலைதுார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி அளிக்கப்படுகிறது.

முதல் தவணையாக ஒரு லட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி நேற்று அளித்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:

என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சி ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டத்துக்கான நிதி ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பழங்குடியின மாணவர்களின் கல்விக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது.

பழங்குடியின மக்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக துவக்கப்பட்ட ஏகலைவா மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கையை 90ல் இருந்து 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு

வருகின்றன.

பழங்குடியின மக்களில் மிகவும் பின்தங்கிய மக்கள் அரசின் ஒவ்வொரு நல திட்டத்திலும் முழுமையான பலனை அடைவதை உறுதி செய்ய இந்த அரசு தீவிரமாக உள்ளது.

பழங்குடியின மக்களுக்கான நல திட்டங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பேசியுள்ளேன்.

அதே சமூகத்தில் இருந்து வரும் அவர் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அதன் அடிப்படையிலேயே திட்டம் வகுக்கப்பட்டது.

உங்களுக்காக நான்கு கோடி வீடுகளை இந்த அரசு கட்டித்தர உள்ளது. முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட உங்களை அடையாளம் கண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கான முதல் தவணை பெற்ற ஒரு லட்சம் பயனாளர்கள் வீடுகளில் இன்றைக்கு தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டத்தில் பயனடைந்த பயனாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

அப்போது சமையல் எரிவாயு இணைப்பு மின்சாரம் குழாய் வழி குடிநீர் வீட்டு வசதி ஆகிய நலத்திட்டங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து பயனாளர்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us