மின் நிலையத்தில் தீவிபத்தினால் டில்லியில் மின்வெட்டு: மக்கள் அவதி
மின் நிலையத்தில் தீவிபத்தினால் டில்லியில் மின்வெட்டு: மக்கள் அவதி
மின் நிலையத்தில் தீவிபத்தினால் டில்லியில் மின்வெட்டு: மக்கள் அவதி
ADDED : ஜூன் 11, 2024 05:10 PM

புதுடில்லி: உ.பி.,யில் உள்ள மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், டில்லியில் பிற்பகல் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு உதவ வேண்டும் என டில்லி அரசு கூறியுள்ளது.
உ.பி.,யின் மண்டோலா பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து டில்லிக்கு 1,200 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று( ஜூன் 11) பிற்பகல், துணை மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி தடைபட்டது. இதனால், டில்லியில் பெரும்பாலான பகுதிகள் மின்வெட்டு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடுமையான வெப்பம், தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் டில்லி மக்களுக்கு மின்வெட்டும் அவதியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக டில்லி மாநில அமைச்சர் அதிஷி கூறுகையில், மின்சாரம் வழங்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. படிப்படியாக மின் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்ட மின் தடை கவலையை அளிக்கிறது. எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் இருக்க மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.