Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்: ஜெய்ப்பூரில் நடந்த கூத்து

ADDED : ஜூன் 11, 2024 05:42 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் செரிஷ். இவர், கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவுரவ் சோனி என்பவருடன் இன்ஸ்டாகிராமம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கவுரவ் சோனி, தாம் ஜெய்ப்பூரில் தங்க நகைக்கடை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செரிஷ் அவரிடம் தங்க நகைகள் வாங்க முயன்றுள்ளார். இதையடுத்து, சோனியிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஷ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.300 தான்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​அது போலியானது எனத் தெரியவந்தது. அவர் உடனே ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு வந்து கவுரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் சோனி நீங்க யாரு என அமெரிக்க பெண் செரிஷ் இடம் கேட்டுள்ளார். நீங்கள் என்னிடம் தங்க நகைகள் வாங்க வில்லை என சோனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியை செரிஷ் நாடினார். அவர்களின் ஆதரவுடன் ஜெய்ப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள கவுரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனியை தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us