Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பொங்கல் பண்டிகை முன்பதிவு தனியார் பஸ் கட்டண கொள்ளை

பொங்கல் பண்டிகை முன்பதிவு தனியார் பஸ் கட்டண கொள்ளை

பொங்கல் பண்டிகை முன்பதிவு தனியார் பஸ் கட்டண கொள்ளை

பொங்கல் பண்டிகை முன்பதிவு தனியார் பஸ் கட்டண கொள்ளை

ADDED : ஜன 11, 2024 03:37 AM


Google News
பெங்களூரு: பொங்கல் பண்டிகைக்காக, ஊருக்கு செல்லும் பயணியருக்கு தனியார் பஸ் நிறுவனங்கள், மனம் போனபடி கட்டணத்தை அதிகரித்து, பயணியருக்கு ஷாக் அளித்துள்ளன.

ஒவ்வொரு பண்டிகையின் போது, தனியார் பஸ் நிறுவனங்கள் பயண கட்டணத்தை அதிகரித்து, பயணியருக்கு சுமையை ஏற்றுகின்றன. இதற்கு முன் 2023 டிசம்பரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நேரத்தில் பயண கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரித்தன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பயணியர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் தனியார் பஸ் உரிமையாளர்கள், பயண கட்டணத்தை கிடுகிடுவென அதிகரித்துள்ளனர். 'ஏசி' பஸ்களின் பயண கட்டணத்தை விட, தனியார் பஸ் பயண கட்டணம், இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஜனவரி 13ல் இரண்டாவது சனிக்கிழமை, 14ம் தேதி ஞாயிறு, 15ம் தேதி பொங்கல் பண்டிகை என, வரிசையாக விடுமுறைகள் வருகின்றன. இதை கொண்டாட ஊருக்கு செல்ல, டிக்கெட் முன் பதிவு செய்ய முற்பட்ட பயணியர், கட்டணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு செல்ல, வழக்கமாக 600 ரூபாய் முதல் 1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது 1,700 முதல் 2,500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

பெங்களூரில் இருந்து ஷிவமொகாவுக்கு 450 - 600 ரூபாய் வரை இருக்கும். இப்போது 1,200 - 1,600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து மங்களூருக்கு, 1,300 ரூபாயில் இருந்து, 1,700 ரூபாயாக, பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு, 1,600 ரூபாயில் இருந்து 2,200 ரூபாயாக, பெங்களூரில் இருந்து மடிகேரிக்கு, 1,150 ரூபாயில் இருந்து, 1,600 வரை அதிகரித்துள்ளனர்.

சிலர் டிக்கெட் கட்டணத்தை கேட்டு, முன் பதிவு செய்ய தயங்குகின்றனர். சிலர் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us