ADDED : ஜன 31, 2024 05:22 AM
சிவாஜி நகர் : சிவாஜி நகரில் பறக்கவிடப்பட்ட பச்சை நிறக் கொடியை, போலீசார் அகற்றினர். அங்கு தேசியக்கொடியை ஏற்றினர்.
பெங்களூரு சிவாஜி நகரின், சாந்தினி சவுக்கில் பச்சை நிறக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது.
இதை கவனித்த ஹிந்து அமைப்பின் தொண்டர் ஒருவர், சமூக வலைதளம் வழியாக போலீஸ் துறைக்கு புகார் அளித்தார். 'பச்சை நிறக் கொடியை அகற்ற, உங்களுக்கு தைரியம் இல்லையா?' என கேள்வி எழுப்பினார்.
அதன்பின் உஷார் ஆன போலீசார், நேற்று மதியம் சாந்தினி சவுக்குக்கு சென்று, அங்கு பறக்கவிடப்பட்டிருந்த பச்சை நிறக் கொடியை அகற்றினர். தேசியக்கொடியை பறக்கவிட்டனர்.