Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி

எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி

எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி

எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி

ADDED : ஜூன் 01, 2025 05:52 PM


Google News
Latest Tamil News
பவானிபட்னா: ஒடிசா தேசிய நெடுஞ்சாலை- 26 இல் போலீஸ் அதிகாரியின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை- 26 இல் இன்று ஒரு உதவி துணை ஆய்வாளரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது அருகில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி சேசாதேவ் பெஹெரா கூறியதாவது:

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்,

ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டத்தில் உள்ள போரிகும்மா பகுதியைச் சேர்ந்த பபித்ரா கோலாபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பவானிபட்னா ரிசர்வ் காவல் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

ஜுனாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனமாலிபூர் பகுதியில் அவரது உடலுக்கு அருகில் தீப்பிடித்து எரிந்த அவரது மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், கோலாபி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், லாரியில் மோதி தீப்பிடித்ததாக சிலர் தெரிவித்தனர்.ஆனால் மரணத்திற்கான உண்மையான காரணத்தை முழுமையான விசாரணை மூலம் கண்டறிய முடியும்,அங்கிருந்து தப்பிச் சென்ற லாரியை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோனைக்கு பின்னர் முழு விபரமும் தெரியவரும்.

இவ்வாற சேசாதேவ் பெஹெரா கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us