Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/திருமணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை: தப்பிய 75 வயது மணமகனுக்கு போலீஸ் வலை

திருமணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை: தப்பிய 75 வயது மணமகனுக்கு போலீஸ் வலை

திருமணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை: தப்பிய 75 வயது மணமகனுக்கு போலீஸ் வலை

திருமணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை: தப்பிய 75 வயது மணமகனுக்கு போலீஸ் வலை

UPDATED : செப் 19, 2025 08:40 AMADDED : செப் 19, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
லுாதியானா:தன் காதலனை திரு மணம் செய்வதற்காக, அமெரிக்காவில் இருந்து வந்த, 71 வயது பெண்ணை, கூலிப்படை வைத்து எரித்துக் கொன்ற, 75 வயது காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர், 71. இந்திய வம்சாவளியான இவர் விவாகரத்து பெற்று, அங்கு தனியாக வசித்து வந்தார்.

மாயமானார்


சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்த ருபிந்தருக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால், 75, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவரும், மனைவியை விவகாரத்து செய்திருந்த நிலையில், இருவருக்கும் இடையிலான பழக்கம் காதலாக மாறியது.

ருபிந்தரை பார்க்க அடிக்கடி அமெரிக்கா பறந்தார் கிரேவால். இதைத் தொடர்ந்து, இருவரும் தி ருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

திருமண த்தை தன் சொந்த ஊரான பஞ்சாபின் லுாதியானாவில் நடத்த கிரேவால் முடிவு செய்தார்.

இதையடுத் து, கடந்த ஜூலையில், ருபிந்தர் இந்தியா வந்தார். அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார்.

அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த ருபிந்தரின் மூத்த சகோதரி கமலா, டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் உதவியை நாடினார்.

அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து மாயமான ருபிந்தரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. கிரேவாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், அவரும் மாயமாகியிருந்தார்.

இதனால் குழப்பமடைந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் கிரேவாலின் மொபைல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரித்தனர்.

இதில், ருபிந்தர் மாயமானதாக கூறப்பட்ட ஜூலை மாதத்தில், கிரேவாலுக்கு வேறொரு எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் பஞ்சாபின் மல்காபட்டியைச் சேர்ந்த சுக்ஜித் சிங் சோன் என தெரியவந்தது.

அவரிடம் முறையாக நடத்தப்பட்ட விசாரணையில், கிரேவாலின் துாண்டுதலால், ருபிந்தரை கொ ன்று எரித்ததை ஒப்புக் கொண்டார். இதற்காக 50 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும் சுக்ஜித் சிங் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: திரு மணத்துக்கு முன்பு ருபிந்தரிடம் இருந்து கிரேவால் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அவரை இந்தியா வரவழைத்தார்.

இங்கு வந்த பின்னும், அவரிடம் பணம் வசூலிப்பதை கிரேவால் நிறுத்தவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

வீட்டில் சோதனை


கொடுத்த பணத்தை ருபிந்தர் திருப்பி கேட்ட நிலையில், சுக்ஜித் சிங்கை வைத்து, கிரேவால் அவரை கொன்று எரித்துள்ளார். மாயமான அவரை தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கொலை நடந்ததாக கூறப்படும் சுக்ஜித் சிங்கின் வீட்டில் சோதனை செய்த போலீசார், எஞ்சிய ருபிந்தரின் எலும்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us