மைசூரு விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு போலீஸ் எச்சரிக்கை
மைசூரு விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு போலீஸ் எச்சரிக்கை
மைசூரு விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2024 02:32 AM

மைசூரு ''மைசூரில் விமானம் தரையிறங்கும்போது லேசர் விளக்கு ஒளிர்ந்த விவகாரம் தொடர்பாக சுற்றுப்புற கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது,'' என, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் தெரிவித்தார்.
மைசூரு - நஞ்சன்கூடு சாலையில் மண்டகள்ளி விமான நிலையம் அமைந்து உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் பல முறை 'லேசர் ஒளி' தென்பட்டதாக, பல விமான நிறுவனங்கள், மைசூரு விமான நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தன.
கடந்த 2ம் தேதியும் கூட மைசூரில் இருந்து சென்னைக்கு விமானம் புறப்பட்டபோது, 'மண்டகள்ளி கிராமப்பகுதியில் இருந்து 'லேசர் ஒளி' தென்பட்டதாக, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தெரிவித்தார்.
இது தொடர்பாக, விமான நிலைய இயக்குனர் அனுாப், போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் கூறியதாவது:
விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போது 'லேசர் ஒளி' தெரிந்துள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் லேசர் ஒளியை கொண்டு இத்தகைய செயல் நடந்துள்ளது.
இது போன்று லேசர் ஒளி காட்டினால் வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்புவோம் என்று ஏற்கனவே சுற்று வட்டார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். சிறுவர்கள் யாராவது இதுபோன்று செய்தார்களா என்பது முழுமையாக தெரியவில்லை.
விமான நிலையத்தை சுற்றி உள்ள கிராம பகுதியில் இது நடந்துள்ளது. இதை கண்காணிக்க உள்ளூர் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.