Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டிரினிடாட் -அண்டு - டபேகோ பயணத்தில் பீஹாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

டிரினிடாட் -அண்டு - டபேகோ பயணத்தில் பீஹாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

டிரினிடாட் -அண்டு - டபேகோ பயணத்தில் பீஹாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

டிரினிடாட் -அண்டு - டபேகோ பயணத்தில் பீஹாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

ADDED : ஜூலை 05, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
போர்ட் ஆப் ஸ்பெயின்: அரசுமுறை பயணமாக கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டபேகோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசரை, 'பீஹாரின் மகள்' என்று புகழாரம் சூட்டினார்.

கானா, டிரினிடாட்- அண்டு டபேகோ குடியரசு, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு, ஒருவார அரசுமுறை பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். கானா நாட்டை அடுத்து, டிரினிடாட் அண்டு டபேகோ குடியரசுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.

அங்குள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் மற்றும் 38 அமைச்சர்களும், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நம் நாட்டின் பீஹார் மாநில பாரம்பரிய உடையணிந்து, போஜ்புரி நாட்டுப்புற பாடல்களுடன் அளிக்கப்பட்ட கோலாகல வரவேற்பில் மோடி நெகிழ்ந்தார். தீவு நாடான டிரினிடாட் அண்டு டபேகோவில், 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில், 45 சதவீதத்துக்கும் அதிகமானோர், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர்.

இவர்களின் மூதாதையர் பல ஆண்டுகளுக்கு முன்பே, டிரினிடாட் அண்டு டபேகோவில் ஒப்பந்த தொழிலாளர்களாக குடியேறினர். இந்த தொடர்பு காரணமாகவே, பிரதமருக்கு பீஹார் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு பிரதமர் மற்றும் சக அமைச்சர்களுடன் உரையாடிய போது, 'டில்லி, பனாரஸ், பாட்னா, கொல்கட்டா நகரங்களின் பெயர்களில், ட்ரினிடாட் அண்டு டபேகோவின் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பது எங்கள் நாட்டிற்கு பெருமை' என, பிரதமர் குறிப்பிட்டார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கம்லாவை பீஹாரின் மகள் என்று குறிப்பிட்டார். 'பிரதமர் கம்லாவின் மூதாதையர், பீஹாரின் பக்சார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர், அந்த இடத்துக்கெல்லாம் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள், கம்லாவை பீஹாரின் மகளாகவே பார்க்கின்றனர்' என்றார்.

சோஹாரி இலையில் விருந்து!

மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் கம்லா சிறப்பு விருந்து அளித்தார். அதில், பீஹாரின் பாரம்பரிய சோஹாரி இலையில் விருந்து பரிமாறப்பட்டது. வாழை இலை போன்ற அமைப்பு கொண்ட இந்த இலை, பீஹாரின் முக்கிய அடையாளம். விருந்துக்கு பின், பிரதமர் கம்லாவுக்கு, உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் மாதிரியையும், சரயு நதியின் புனித நீர் மற்றும் சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளா புனித நீர் ஆகியவற்றையும் பரிசாக, மோடி வழங்கினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us