காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
ADDED : ஜூன் 09, 2024 08:21 AM

புதுடில்லி: காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று (ஜூன்9) இரவு 7 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் அவர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
காலை ராஜ்காட் சென்ற பிரதமர் அங்குள்ள காந்தி, வாஜ்பாய், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக முப்படை வீரர்கள் மூத்த அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். இவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சென்றனர்.