தேர்தல் தோல்வி 'எச்சரிக்கை மணி' அமைச்சர் எம்.பி., பாட்டீல் வருத்தம்
தேர்தல் தோல்வி 'எச்சரிக்கை மணி' அமைச்சர் எம்.பி., பாட்டீல் வருத்தம்
தேர்தல் தோல்வி 'எச்சரிக்கை மணி' அமைச்சர் எம்.பி., பாட்டீல் வருத்தம்
ADDED : ஜூன் 09, 2024 04:43 AM

விஜயபுரா : ''வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றியும், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது, நமக்கு எச்சரிக்கை மணி,'' என, அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறி உள்ளார்.
தொழில் துறை அமைச்சர் எம்.பி.,பாட்டீல், விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:
ஐந்து வாக்குறுதித் திட்டங்களால், கர்நாடகாவில் காங்கிரஸ் 14 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என நினைத்தோம். ஆனால் ஒன்பது இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருப்பது, வருத்தம் அளிக்கிறது. இந்த தோல்வி, நமக்கு எச்சரிக்கை மணி.
தங்களை தலைவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். நாங்கள் எங்கு தடுமாறினோம் என்று, கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். வெற்றி பெறும் நிலையில் இருந்த தொகுதிகளில் கூட, தோற்றுள்ளோம்.
குறைந்த இடத்தில் வெற்றி பெற்றதற்கு, யாரையும் குறை கூற முடியாது. அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், களத்தில் இறங்கி வேலை செய்தனர். சில நேரங்களில் தேர்தல் முடிவுகள், நமது எண்ணத்திற்கு எதிராக இருக்கலாம்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக, பிரதமராக பதவி ஏற்க உள்ளார். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களை விட, இந்த தேர்தலில் பா.ஜ., பலவீனமாக உள்ளது. இம்முறை ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது.
பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரை நம்பி, ஆட்சி அமைப்பது எவ்வளவு கடினம் என்று, எங்களுக்கு நன்கு தெரியும். மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் பா.ஜ., குறைந்த இடங்களில் வெற்றி பெறும் என்று, தேர்தலுக்கு முன்பே கூறினேன். இப்போது அது நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.