மக்கள் பிரதிநிதிகள் வழக்கு ஐகோர்ட் 3 வாரங்கள் 'கெடு'
மக்கள் பிரதிநிதிகள் வழக்கு ஐகோர்ட் 3 வாரங்கள் 'கெடு'
மக்கள் பிரதிநிதிகள் வழக்கு ஐகோர்ட் 3 வாரங்கள் 'கெடு'
ADDED : ஜன 11, 2024 03:47 AM
பெங்களூரு: கர்நாடக மாநில எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த தகவலை, மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க, பதிவாளருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்கவும், கண்காணிக்கவும், நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கு, கர்நாடக தலைமை நீதிபதி பிரசன்ன வராலே, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
கடந்த 2020 செப்., 16ம் தேதிக்கு பின், கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தில், தற்போதைய முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மீது தொடரப்பட்டு உள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்.
மூன்று வாரத்திற்குள் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கின் 'அமிகஸ் கியூரி'யாக - நீதிமன்ற நண்பர் - பதிவாளர் ஆதித்யா சோண்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.