அடுக்குமாடிகளில் வசிக்க மக்கள் ஆர்வம்
அடுக்குமாடிகளில் வசிக்க மக்கள் ஆர்வம்
அடுக்குமாடிகளில் வசிக்க மக்கள் ஆர்வம்
ADDED : ஜன 31, 2024 12:04 AM
பெங்களூரு : பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க, நகர மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நகரம், தொழில்களின் நகரம் என்ற புனைப்பெயர்களால், பெங்களூரு அழைக்கப்படுகிறது.
இதற்கு ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தான் காரணம். இதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும், பெங்களூருக்கு வேலைக்காக வருகின்றனர். இப்படி வருவோர், வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
நகர பகுதிகளில் 12,000 ரூபாயில் இருந்தும், நகரை விட்டு கொஞ்சம் வெளியில் இருக்கும் பகுதிகளில் 5,000 ரூபாயில் இருந்தும் வாடகைக்கு வீடு கிடைக்கிறது.
வாங்கும் சம்பளத்தில் பாதியை வாடகைக்கு கொடுக்கின்றனர்.
எப்படியும் வாடகை கொடுப்பது உறுதி என்பதால், பெரும்பாலானோர், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க ஆசைப்படுகின்றனர்.
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளின் வாடகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும் அங்கு வசிக்க, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெங்களூரு மத்திய பகுதியில் உள்ள லாவேல்லி சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில் குறைந்த வாடகை 21,000 ரூபாயாகவும், அதிகபட்ச வாடகை 31,500 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.