ADDED : ஜூன் 01, 2025 03:18 AM

பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பெருமையுடனும், பாதுகாப்பாகவும் உணர்கிறது. ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடிவடையவில்லை. பாகிஸ்தான் நம் நாட்டுடன் விரோத போக்கு கொண்டிருக்கும் வரை இது தொடரும். நமக்கு தொல்லை தந்தால், அவர்களின் நாட்டுக்குள் சென்று பதிலடி தரப்படும்.
நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
விளக்கம் தேவை!
மத்திய அரசின் தேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான முனைப்பு குறித்து, எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் ஆப்பரேஷன் சிந்துாரில் நம் வீரர்கள் மற்றும் விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து, மத்திய அரசு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
வெற்று முழக்கம்!
மோடி 11 ஆண்டுகளாக மத்தியில் பிரதமராக உள்ளார். நிதிஷ் 20 ஆண்டுகளாக பீஹாரின் முதல்வராக இருக்கிறார். இவர்கள் இரட்டை இன்ஜின் அரசு நடப்பதாக கூறுகின்றனர்; ஆனால், இவர்கள் ஆட்சியில் பீஹாருக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் வரவில்லை. வெற்று முழக்கங்களை வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்