ADDED : ஜூன் 24, 2025 07:42 PM
புதுடில்லி,:விருந்து மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேற்கு டில்லி டி.எல்.எப்., மோதி நகரில் உள்ள கோல்டன் விருந்து மண்டபத்தில் நேற்று முன் தினம், 9:00 மணிக்கு தீப்பற்றியது. மளமளவென தீ பரவி மண்டபம் முழுதும் கொழுந்து விட்டு தீ எரிந்தது. அந்தப் பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது.
தகவல் அறிந்து, 24 வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர், ஐந்து மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மண்டப ஊழியர் ராஜேஷ் தீயில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.