நேரம் தவறாத சர்வதேச விமான நிலையங்கள்: 2, 3வது இடங்களில் ஹைதராபாத், பெங்களூரு
நேரம் தவறாத சர்வதேச விமான நிலையங்கள்: 2, 3வது இடங்களில் ஹைதராபாத், பெங்களூரு
நேரம் தவறாத சர்வதேச விமான நிலையங்கள்: 2, 3வது இடங்களில் ஹைதராபாத், பெங்களூரு
UPDATED : ஜன 03, 2024 02:19 PM
ADDED : ஜன 03, 2024 02:05 PM

புதுடில்லி: சர்வதேச அளவில் 2023ம் ஆண்டில் சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்ட விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையம் 2வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 3வது இடத்திலும் உள்ளது.
சர்வதேச விமான நிலையங்களின் கடந்த ஆண்டு நேர செயல்திறன் குறித்து ‛சிரியம்' என்ற விமான போக்குவரத்துத்துறை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பட்டியலில்,
பெரிய விமான விமான நிலையங்களில்
அமெரிக்காவின் மினியாபொலிஸ் செயின்ட் பால் விமான நிலையம் 84.44 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தில் 84.42 சதவீத புள்ளிகளுடன் ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையமும்,
84.08 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் உள்ளது.
நடுத்தர அளவிலான விமான நிலையங்களில்
ஜப்பானின் ஒசாகா விமான நிலையம் 90.71 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் 83.91 சதவீத புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
சரியான நேரத்தில் இயங்கும் விமான நிறுவனமாக கொலம்பியாவின் ஏவியன்கா விமான நிறுவனம் உள்ளது.