லோக்சபா சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு
லோக்சபா சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு
லோக்சபா சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு
UPDATED : ஜூன் 26, 2024 11:45 AM
ADDED : ஜூன் 26, 2024 11:30 AM

புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 2வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க பா.ஜ., எடுத்த முயற்சி பலன் அளிக்காததால், லோக்சபாவில் இன்று(ஜூன் 26) சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, 'இண்டியா' கூட்டணி சார்பில் கே.சுரேஷ் போட்டியிட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அதிகப்படியான எம்.பிக்கள் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 2வது முறையாக ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பிரதமர் மோடி அழைத்து வந்தனர். அவருக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மகிழ்ச்சி
பின்னர் பிரதமர் மோடி லோக்சபாவில் பேசுகையில், சபாநாயகர் பதவி கடினமானது என்றாலும், ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி. சபாநாயகராக மீண்டும் தேர்வாகி உள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்கள்'' எனக் குறிப்பிட்டார்.