நான் எங்கேயும் போகவில்லை.. தேஜ கூட்டணியில்தான் இருப்பேன்: பிரதமர் முன்னிலையில் நிதிஷ் உறுதி
நான் எங்கேயும் போகவில்லை.. தேஜ கூட்டணியில்தான் இருப்பேன்: பிரதமர் முன்னிலையில் நிதிஷ் உறுதி
நான் எங்கேயும் போகவில்லை.. தேஜ கூட்டணியில்தான் இருப்பேன்: பிரதமர் முன்னிலையில் நிதிஷ் உறுதி
ADDED : செப் 15, 2025 10:23 PM

பூர்னியா: பிரதமர் மோடிக்கு விசுவாசமாக இருப்பேன்,ஜேடியு--பாஜ கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.
பீஹார் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.36,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். பூர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணி ஒன்றில் அவர் மோடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது;
நான் மீண்டும் ஒருமுறை அவரை (பிரதமர் மோடி) வாழ்த்தி நன்றி கூறுகிறேன். அவர் நாட்டிற்கும், பீஹாருக்கும் நிறைய செய்து வருகிறார்.
இங்குள்ள அனைத்து பிரமுகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பீஹார் மாநிலத்துக்கு அவர் செய்த பணிகள் மிக பெரியவை.
ஜேடியு, பாஜ கூட்டணி முதன்முறையாக 2005ம் ஆண்டு நவம்பரில் ஒரு அரசை அமைத்தது. ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை நான் மற்ற கூட்டணிகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் அது கடந்தகாலம். இப்போது நான் திரும்பி வந்து விட்டேன். இனிமேல் நான் எங்கும் செல்ல மாட்டேன்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.