வாரிசு அரசியல் வேண்டாம்! எம்.எல்.சி.,க்கள் கெஞ்சல்
வாரிசு அரசியல் வேண்டாம்! எம்.எல்.சி.,க்கள் கெஞ்சல்
வாரிசு அரசியல் வேண்டாம்! எம்.எல்.சி.,க்கள் கெஞ்சல்
ADDED : பிப் 24, 2024 04:11 AM
பெங்களூரு : 'லோக்சபா தேர்தலில் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு, 'சீட்' கொடுக்க வேண்டாம்' என, துணை முதல்வர் சிவகுமாரிடம்,காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் கெஞ்சியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.சி.,க்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளித்தார்.
அதன்பின்னர் லோக்சபா தேர்தல் குறித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிலர், தங்களது குறைகளை, சிவகுமாரிடம் பட்டியலிட்டனர். 'அரசில் எங்களுக்கு உரிய அந்தஸ்து வழங்காமல் புறக்கணிக்கிறீர்கள். எங்களை அரசியல்ரீதியாக முடக்கும் முயற்சிகள் நடக்கின்றன' என, தங்களுடைய ஆதங்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
'கட்சிக்காக உழைக்கும் விசுவாசிகளுக்கு, லோக்சபா தேர்தல் 'சீட்' கொடுங்கள். அமைச்சர்களின் வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டாம். எம்.எல்.சி., தொகுதிகளுக்கும், அதிக நிதி ஒதுக்குங்கள்' என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எம்.எல்.சி.,க்களின் குறைகளை கேட்ட சிவகுமார், இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 20 இடங்களில், வெற்றி பெற உழைக்கும்படி, எம்.எல்.சி.,க்களிடம் கேட்டுக் கொண்டார்.