ADDED : ஜன 25, 2024 01:04 AM
'பிரதமருக்கு நன்றி'
மறைந்த பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கான முழுப் பெருமையை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கலாம். இதன் வாயிலாக என் அரசியல் வழிகாட்டிக்கு நாட்டின் மிக உயரிய விருது வழங்க வேண்டும் என்ற என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பீஹாரில் நான் ஆட்சிக்கு வந்தது முதல் வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமருக்கு, அவரின் அரசுக்கும் மிகப்பெரிய நன்றி. விருது அறிவிக்கப்பட்டதற்கான முழு நன்மதிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி கோரலாம்.
நிதீஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்