பயங்கரவாதிகள் ஊடுருவல் வழக்கு; காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு!
பயங்கரவாதிகள் ஊடுருவல் வழக்கு; காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு!
பயங்கரவாதிகள் ஊடுருவல் வழக்கு; காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு!
ADDED : மார் 19, 2025 10:03 AM

ஸ்ரீநகர்: எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியது தொடர்பான வழக்கு தொடர்பாக, ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஷ்கர்- இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை பகுதி வழியாக இந்தியாவிற்கு நுழைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக காஷ்மீருக்குள் சிலர் பதுங்கி இருப்பதாக புகார் எழுந்தன.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்தது. இது குறித்து, காஷ்மீரில் 12 இடங்களில் இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பலத்த பாதுகாப்புடன் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுத கிடங்குகள், மறைவிடங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை நடக்கிறது. இதனால் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.