Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

Latest Tamil News
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் பூட்டிய வீடு ஒன்றில் இருந்து ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள், வெளிநாட்டு கைக்கடிகாரங்களை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு: ஆமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவினர், தீவிரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து சோதனை நடத்த திட்டமிட்டனர்.

அங்கு சென்ற குழுவினர், வீடு பூட்டப்பட்டு இருக்க அங்கு வசித்து வந்த மேக் ஷா என்பவரின் உறவினரிடம் இருந்து சாவியை பெற்று சோதனையை தொடங்கினர். அதிரடியாக நடைபெற்ற இந்த சோதனையில் வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்கக் கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள், ரூ.1.37 கோடி ஆகியவை மீட்கப்பட்டன.

சிக்கிய பணத்தின் அளவு அதிகம் என்ற காரணத்தால், அதை எண்ணும் இயந்திரத்தை அதிகாரிகள் அங்கேயே கொண்டு சென்று பணத்தை எண்ணினர்.

இதுகுறித்து தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி., சுனில் ஜோஷி கூறியதாவது: உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த வீட்டை மேக் ஷா என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

துபாய் பங்கு சந்தை முதலீட்டாளரான அவரின் தந்தை மகேந்திரா ஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us