Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் என்.ஐ.ஏ., ரெய்டு

காஷ்மீரில் என்.ஐ.ஏ., ரெய்டு

காஷ்மீரில் என்.ஐ.ஏ., ரெய்டு

காஷ்மீரில் என்.ஐ.ஏ., ரெய்டு

ADDED : பிப் 11, 2024 12:56 AM


Google News
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது மற்றும் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஜமாத்- - இ - இஸ்லாமி எனும் அமைப்பு மத்திய அரசால் கடந்த 2019ல் தடை செய்யப்பட்டது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் பயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டுவது மற்றும் இளைஞர்களை மூளைச் சலவை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீரின் குஜ்ஜார் நகர், ஷாஹீதி சவுக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தனியார் பள்ளி ஒன்றிலும், அதன் இயக்குனர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

இதே போல் குல்காம் மாவட்டத்தில் செய்யப்பட்ட ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்தின் முன்னாள் தலைவர்களான ஷேக் குலாம் ஹாசன் மற்றும் சாயார் அகமது ரேஷி ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us