‛நீட்' முறைகேடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது என்.டி.ஏ.
‛நீட்' முறைகேடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது என்.டி.ஏ.
‛நீட்' முறைகேடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது என்.டி.ஏ.
UPDATED : ஜூலை 10, 2024 07:33 PM
ADDED : ஜூலை 10, 2024 06:59 PM

புதுடில்லி: ‛நீட்' தேர்வு முறைகேடு வழக்கில் இன்று தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை துவங்கியுள்ளது. பீஹாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில், என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில் 2024 ‛நீட்' தேர்வில் 63 முறைகேடு புகார்கள் பதிவாகியுள்ளன. விசாரணையில் 33 மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுளளது. 22 மாணவர்கள் மூன்றாண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேரின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு வினாத்தாளை ‛நீட்‛ அலுவலகத்தில் தான் நிபுணர்கள் தயார் செய்வர். இந்த வினாத்தாளில் கேள்வி எது என்பது நிபுணர்களுக்கே தெரியாது. தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். இவ்வாறு என்.டி.ஏ, பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.