சாலைப்பணிகளை சீக்கிரம் முடிங்க - உங்கள் காலில் கூட விழுகிறேன்: ஐ.ஏ.எஸ்., சிடம் கெஞ்சிய நிதீஷ்
சாலைப்பணிகளை சீக்கிரம் முடிங்க - உங்கள் காலில் கூட விழுகிறேன்: ஐ.ஏ.எஸ்., சிடம் கெஞ்சிய நிதீஷ்
சாலைப்பணிகளை சீக்கிரம் முடிங்க - உங்கள் காலில் கூட விழுகிறேன்: ஐ.ஏ.எஸ்., சிடம் கெஞ்சிய நிதீஷ்
UPDATED : ஜூலை 10, 2024 08:06 PM
ADDED : ஜூலை 10, 2024 07:54 PM

பாட்னா: சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடியுங்கள் நீங்கள் விரும்பினால் உங்கள் காலில் கூட விழுகிறேன் என பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பொது நிகழ்ச்சியில் பலபேர் முன்பு அதிகாரியிடம் கண்டிப்பு காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பீஹாரில் ஜே.பி. கங்கா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி பணிகள் நிறைவேறின. பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (10.07.2024) நடந்தது. இதில் துணை முதல்வர்கள் சம்ராட் சவுத்ரி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் நிதீஷ்குமார், மேடையில் அமர்ந்தார். அப்போது சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்பான துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியை பார்த்து திடீரென எழுந்து பணிகளை விரைந்து முடியுங்கள் விரும்பினால் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கூறி காலில் விழ முயற்சித்தார். உடன் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியோ அதிர்ந்து போனார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியது, .தனக்கு எந்த அதிகாரம் இல்லை என்பதை பொது இடத்தில் முதல்வரே நிரூபித்துவிட்டார் என்றார்.