ADDED : பிப் 10, 2024 11:24 PM

கைவந்த கலை!
வாஜ்பாய் அரசின் கடைசி ஆண்டில் பணவீக்க விகிதம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, ஆனால், அதைத் தொடர்ந்து, 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் அதிக அளவு உயர்ந்தது. சாதனைகளை அழிப்பது காங்கிரசுக்கு கைவந்த கலை.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,
ஆட்சியை கலையுங்கள்!
மஹாராஷ்டிராவில் தினந்தோறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால், அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
உத்தவ் தாக்கரே
தலைவர், சிவசேனா
உத்தவ் அணி
கருத்து வேறுபாடு கூடாது!
அத்வானி, நரசிம்ம ராவ், சரண் சிங் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு பாரத ரத்னா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் நம் பிரதமரின் முடிவில் கருத்து வேறுபாடுகளை காட்ட வேண்டாம்; அது தேவையற்றது.
தேவ கவுடா
முன்னாள் பிரதமர், ம.ஜ.த.,