
தொகுதி பங்கீடு சுமுகம்!
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன், லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு பெரும்பாலும் முடிந்துவிட்டது. அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கிடையே எந்த உரசலும் எழவில்லை.
சஞ்சய் ராவத்
எம்.பி., -- சிவசேனா உத்தவ் அணி
மக்கள் விரும்பவில்லை!
கர்நாடக அரசு 30 ஆண்டுகள் கழித்து கரசேவகர் ஒருவரை கைது செய்துஉள்ளது. பழிவாங்கும் அரசியல் செய்யும் கர்நாடக அரசின் போக்கை மக்கள் விரும்பவில்லை. முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது.
குமாரசாமி
முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,
நாட்டில் ராம ராஜ்ஜியம்!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நெருங்கும் வேளையில், நாட்டில் ராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவை உலகளவில் வளர்ச்சி அடைந்த நாடாக, சக்தி மிக்க நாடாக மாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
ராஜ்யவர்தன் ரத்தோர்
மாநில அமைச்சர், ராஜஸ்தான்