
கெஜ்ரிவால் பயப்படுகிறார்!
மதுபான கொள்கை ஊழலில் புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சம்பந்தம் உள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என பயந்து நடுங்கும் அவர், அமலாக்கத்துறை விசாரணையை தவிர்க்க தொடர்ந்து நொண்டி சாக்கு கூறி வருகிறார்.
கவுரவ் பாட்டியா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
பிரசாரத்தை தடுக்க சதி!
முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. கெஜ்ரிவாலை கைது செய்து, வர இருக்கும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பதே நோக்கம்.
அதிஷி
புதுடில்லி கல்வி அமைச்சர், ஆம் ஆத்மி
உலகமே வியக்கிறது!
உத்தர பிரதேச மாநிலத்தின் இன்றைய வளர்ச்சியை பார்த்து உலகமே வியக்கிறது. கடந்த ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் உ.பி., நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்துள்ளது. பெண்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,