
ஜனநாயகத்தின் அடித்தள துாண்!
இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர். இதனால் சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.
சோனியா
முன்னாள் தலைவர், காங்கிரஸ்
பா.ஜ., - எம்.பி.,க்களை பின்பற்றணும்!
வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்த பா.ஜ., - எம்.பி., ரமேஷ் பிதுரி மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய, அக்கட்சி எம்.பி., பிரிஜ் பூஷன், லோக்சபாவை அலங்கரிக்கின்றனர். சஸ்பெண்டை தவிர்க்க, அவர்களை போல் நாமும் நடந்து கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது.
டெரெக் ஓ பிரையன்
ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்.,
எங்களுக்கு பயமில்லை!
ராமர் கோவில் திறப்பு விழா வரை, பா.ஜ.,வை எதிர்க்கும் தலைவர்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படும்படி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு மறைமுகமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கண்டு எங்களுக்கு பயமில்லை.
மனோஜ் குமார் ஜா
ராஜ்யசபா எம்.பி., - ராஷ்ட்ரீய ஜனதா தளம்