ADDED : ஜன 08, 2025 02:15 AM

நிதி ஒதுக்காதது ஏன்?
கும்பமேளாவுக்கு அடுத்து, நாட்டின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சி கங்கையும், வங்க கடலும் சங்கமிக்கும் கங்காசாகர் மேளா. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்கத்தில் நடக்கும் கங்காசாகர் மேளாவுக்கு, ஒரு கோடிக்கும் மேல் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் மத்திய அரசு கங்காசாகர் மேளாவுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
பட்ஜெட்டில் என்ன திட்டம்!
பொது மக்களின் சேமிப்பை உயர்த்தும் வகையில், பட்ஜெட்டில் ஏதேனும் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளதா என தெரியவில்லை. விலைவாசி உயர்வை சந்தித்து வரும் மக்களுக்கு மேலும் தொல்லை தர போகின்றனரா என்றும் தெரியவில்லை. ஜி.எஸ்.டி., மற்றும் பிற வரிகளால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
டில்லியை மேம்படுத்துவோம்!
டில்லி மக்கள் தங்களின் வாழ்வாதார முன்னேற்றம், காற்று மாசை குறைத்தல் மற்றும் மாநிலத்தை பல்வேறு வகையில் மேம்படுத்த பங்களிக்கும் ஒரு அரசை தேர்வு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த டில்லியின் வளர்ச்சிக்கு பா.ஜ., உறுதி பூண்டுள்ளது.
நட்டா
மத்திய அமைச்சர், பா.ஜ.,