சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்
ADDED : ஜூன் 23, 2024 05:46 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து கட்ட, பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர்.அப்பகுதியில், வழக்கம் போல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்தது.
இதில் இரண்டு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர். சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.