கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்., மவுனம்: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்., மவுனம்: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்., மவுனம்: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி

கண்டனம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
மவுனம்
கள்ளச்சாராய பலிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மவுனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மூலம் லைசென்ஸ் பெற்று மதுவிநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் எங்கே போனார்கள். வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது.
அனுமதி மறுப்பு
1971 ல் வழங்கப்பட்ட பல நல்ல அறிவுரைகளையும் மீறி, தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கிய திமுக அரசு மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்தது. இன்று அரசே டாஸ்மாக் மூலம் மது விநியோகம் செய்கிறது. இந்த கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால், மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது.
வலியுறுத்தல்
இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவு அளிப்பதால் மாநில அரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.