தற்கொலைக்கு முயற்சித்த தாய் மரணம்; குழந்தைக்கு சிகிச்சை
தற்கொலைக்கு முயற்சித்த தாய் மரணம்; குழந்தைக்கு சிகிச்சை
தற்கொலைக்கு முயற்சித்த தாய் மரணம்; குழந்தைக்கு சிகிச்சை
ADDED : பிப் 25, 2024 02:47 AM
ஷிவமொகா: குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த தாய் உயிரிழந்தார்.
ஷிவமொகாவின், சித்திபுராவை சேர்ந்தவர் மஞ்சுநாத், 30. கூலி வேலை செய்த இவருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், கஸ்துாரிக்கும் திருமணம் நடந்தது.
இவர் மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால் முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே, உதடு பிளவு பட்டிருந்தது.
இதனால் குழந்தையை வெறுத்து, துன்புறுத்த துவங்கினார். குழந்தைக்கு உதடு அறுவை சிகிச்சை செய்ய, கஸ்துாரியின் தாய் வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டனர். ஆறு மாதங்களுக்கு முன், தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மனைவி, மகளை இம்சிப்பதை மஞ்சுநாத் நிறுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, கஸ்துாரி தம் மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் தாய் உயிரிழந்தார். குழந்தை சிகிச்சை பெறுகிறது.
மகளின் இறப்புக்கு, கணவர் வீட்டாரே காரணம் என, கஸ்துாரியின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.