பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: ஜூன் 8ல் மீண்டும் பதவியேற்பு
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: ஜூன் 8ல் மீண்டும் பதவியேற்பு
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: ஜூன் 8ல் மீண்டும் பதவியேற்பு
UPDATED : ஜூன் 05, 2024 02:18 PM
ADDED : ஜூன் 05, 2024 01:15 PM

புதுடில்லி : வரும் 8ம் தேதி 3வது முறையாக பிரதமர் ஆக நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி இல்லம் சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ., தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தற்போதைய லோக்சபாவை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து வரும் 8 ம் தேதி( சனிக்கிழமை) அன்று மாலை மோடி 3வது முறையாக பதவி ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பிறகு உறுதியான தகவல் வெளியாகும்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி இல்லம் சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், தற்போதைய 17வது லோக்சபாவை கலைக்கவும் பரிந்துரை செய்தார்.