ADDED : செப் 23, 2025 01:26 AM

சர்வதேச அரசியலில் வேறுபாடுகள் இருப்பினும், பிரதமர் மோடியுடன் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். இதனால், சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் நபராக அவர் திகழ்கிறார். துாய இதயத்துடன் மக்களுக்கு பணியாற்றும் பிரதமர் மோடி, பதிலுக்கு எந்த பலனையும் எதிர்பார்க்கமாட்டார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி
இழப்பை ஈடு செய்க!
ஜி.எஸ்.டி., விகித மறுசீரமைப்பால் தெலுங்கானாவிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை, மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுசெய்ய வேண்டும். இந்நடவடிக்கையால் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அனைத்து மாநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்
மக்களின் நம்பிக்கை!
ஜி.எஸ்.டி., சீர்திருத்த நடவடிக்கை பற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றியும் பேசியிருக்க வேண்டும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்பது ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை; இனி, அது நீதிமன்றத்தின் முடிவு.
பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி