எதீந்திரா போட்டியிட மாட்டார் அமைச்சர் வெங்கடேஷ் கருத்து
எதீந்திரா போட்டியிட மாட்டார் அமைச்சர் வெங்கடேஷ் கருத்து
எதீந்திரா போட்டியிட மாட்டார் அமைச்சர் வெங்கடேஷ் கருத்து
ADDED : ஜன 17, 2024 01:28 AM
சாம்ராஜ்நகர் : ''லோக்சபா தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ., எதீந்திரா, மைசூரு தொகுதியில் போட்டியிட மாட்டார்,'' என, கால்நடைத் துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சாம்ராஜ் நகரில் நேற்று அவர் கூறியதாவது:
எனக்கு தெரிந்த தகவலின் படி, லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், எதீந்திரா போட்டியிட மாட்டார். முதல்வர் சித்தராமையாவும் இதையே கூறியுள்ளார்.
ஆனால், பா.ஜ.,வினர் அவ்வப்போது எதிந்திராவின் பெயரை கூறுவது ஏன். இது அவர்களின் பழக்கம்.
லோக்சபா தேர்தலில் அமைச்சர்கள் போட்டியிடுவது குறித்து, எனக்கு தெரியாது. நான் போட்டியிட மாட்டேன். முந்தைய சட்டசபை தேர்தலே, என் இறுதி தேர்தலாகும். வயதும் ஆகிவிட்டது. எனவே, இனி நான் போட்டியிட மாட்டேன். பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, கலாசாரம் இல்லாத மனிதர். அவரைப் பற்றி என்ன சொல்வது.
இவ்வாறு அவர் கூறினார்.


