விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சந்தோஷ் லாட்
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சந்தோஷ் லாட்
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சந்தோஷ் லாட்
ADDED : ஜன 08, 2024 07:01 AM
தார்வாட்,: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், தார்வாடின், ஆள்னாவராவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று முன் தினம் சென்றிருந்தார்.
நிகழ்ச்சிகள் முடிந்த பின், இரவு 8:30 மணியளவில் தார்வாடுக்கு காரில் புறப்பட்டார்.
தார்வாட் புறநகரில், கெலகேரி பாலம் அருகில், மூன்று பைக்குகள் மோதி, மூன்று இளைஞர்கள், மூன்று இளம் பெண்கள் காயமடைந்து விழுந்து கிடந்தனர்.
இந்த வழியாக சென்ற அமைச்சர் சந்தோஷ் லாட், விபத்து நடந்திருப்பதை கவனித்து, காரை நிறுத்தும்படி கூறினார். காயமடைந்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தைரியம் கூறி, தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார்.
அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கும்படி, டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.