'யுவ நிதி' திட்டத்தில் இளைஞர்களிடம் ஆர்வமின்மை விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
'யுவ நிதி' திட்டத்தில் இளைஞர்களிடம் ஆர்வமின்மை விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
'யுவ நிதி' திட்டத்தில் இளைஞர்களிடம் ஆர்வமின்மை விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
ADDED : ஜன 06, 2024 07:05 AM

பெங்களூரு: அரசின் 'யுவ நிதி' திட்டத்திற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்காதது தொடர்பாக, விதான் சவுதாவில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, மருத்துவ கல்வி, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் அறிவுரை வழங்கினார்.
கர்நாடக அரசின் ஐந்தாவது வாக்குறுதியான 'யுவ நிதி' திட்டத்துக்கான விண்ணப்பம், கடந்தாண்டு டிச., 26ம் தேதி துவங்கியது. ஆனால், இத்திட்டத்திற்கு பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்களிடம் ஆதரவு இல்லாததால், ஏழு நாட்களில், 19,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
அதிர்ச்சி
லோக்சபா தேர்தலை கணக்கில் வைத்தே இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்த ஆளும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசின் 'யுவ நிதி' திட்டத்திற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்காதது தொடர்பாக, விதான் சவுதாவில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவ கல்வி, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
சில மாவட்டங்களில் 'யுவ நிதி' திட்டத்தில் பதிவு செய்யாதது குறித்து, புள்ளி விபரங்களை வழங்கவும்.
பட்டய கல்லுாரி, டிப்ளமா, பொறியியல், மருத்துவ கல்லுாரிகளின் நிறுவன தலைவர்கள், முதல்வர்களுடன் கூட்டம் நடத்தி, உடனடியாக அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும். அரசின் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
நகராட்சி கவுன்சில், மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து உட்பட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் பயன்கள் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
அத்துடன், சமூக ஊடகங்களை அதிகாரிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும். வாட்ஸாப், முகநுால், இன்ஸ்டாகிராம், குறுந்தகவல் உட்பட பல வகையான தளங்களை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் டிப்ளமா, பொறியியல், மருத்துவ கல்லுாரி சான்றிழ்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.