வாடகை கார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் மாயம்
வாடகை கார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் மாயம்
வாடகை கார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் மாயம்
ADDED : ஜன 05, 2024 04:08 AM
தேவனஹள்ளி : பெங்களூரு விமான நிலையத்தில், வாடகை கார் நிறுவனத்தில் பணியாற்றிய, இளம்பெண் மர்மமான முறையில் மாயமாகி உள்ளார்.
துமகூரைச் சேர்ந்தவர் நேத்ரா, 27. பெங்களூரு விமான நிலையத்தின் 1வது முனையத்தில் உள்ள, வாடகை கார் நிறுவனத்தில், ஊழியராக வேலை செய்தார். தேவனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்தார்.
துமகூரில் உள்ள குடும்பத்தினரிடம், நேத்ரா தினமும் மொபைல் போனில் பேசுவது வழக்கம். கடந்த மாதம் 29ம் தேதி மதியம், மொபைல் போனில் பெற்றோரிடம் பேசினார். அன்றைய தினம் இரவு பணிக்குச் செல்வதாக கூறினார்.
மறுநாள் காலை பெற்றோர் மொபைல் போனில் அழைத்தபோது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
மொபைலுக்கு 'சார்ஜிங்' செய்து இருக்க மாட்டார் என்று, நினைத்து பெற்றோர் விட்டுவிட்டனர். ஆனால் அன்று முழுவதும், அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது.
சந்தேகம் அடைந்த, நேத்ராவின் சகோதரர் மகேஷ்குமார், பெங்களூரு வந்து, வாடகை கார் நிறுவனத்தில் சென்று விசாரித்தார். அவர்கள் 30ம் தேதி காலை பணி முடிந்து, நேத்ரா சென்று விட்டதாகவும், அதன்பின்னர் பணிக்கு வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த மகேஷ்குமார், நேத்ராவுடன் வேலை செய்த ஊழியர்கள், தோழிகளிடம் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி, எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், நேத்ரா மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும், கடந்த 2ம் தேதி, விமான நிலைய போலீசில், மகேஷ்குமார் புகார் செய்தார். மாயமான நேத்ராவை போலீசார் தேடுகின்றனர்.