மங்களூரு தமிழ் சங்க பொங்கல் விழா கோலாகலம்
மங்களூரு தமிழ் சங்க பொங்கல் விழா கோலாகலம்
மங்களூரு தமிழ் சங்க பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 29, 2024 07:27 AM

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில், உருவா ஸ்டோர் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று மங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் புத்தாண்டு, பொங்கல் விழா நடந்தது.
விழாவில், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. பெண்கள், ஆண்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், நிறைகுட தண்ணீருடன் இடுப்பில் வைத்து பெண்கள் வேகமாக செல்லும் போட்டி நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு மங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் டாக்டர் அகிலா, சத்யா தலைமையிலான குழுவினர் சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மங்களூரு கூளூர் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கருப்பையா தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் நிர்வாகிகள் ஹரி துரைசாமி, செந்தில், நாட்டு துரை, சண்முகம், செல்லப்பன் மாணிக்கம், குமரேசன், ஹரி துரைசாமி, அகிலா அருள், சத்யா ரமேஷ், கோமதி சந்தோஷ், சின்ராஜ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் விழாவை நடத்தினர்.
தமிழ்ச்சங்கம் சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.
விழா மேடையில் பெங்களூரு, பாலக்காடு, சுள்ளியா, கோவா உட்பட பல நகரங்களில் இருந்து வந்த தமிழ்ச்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த ரேவதி குழுவினரின் ஆடல், பாடல், நடன நாட்டிய நிகழ்ச்சி, சிறுமி சாதனாவின் பரத நாட்டியம், சிறுமியரின் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மங்களூரு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.