ரூ.5 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை
ரூ.5 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை
ரூ.5 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை
ADDED : ஜூலை 02, 2025 10:02 PM
புதுடில்லி:பீஹாரைச் சேர்ந்தவர் காஷ்யப் குமார். இவரை தொடர்பு கொண்ட பால்விந்தர் சிங் என்பவர், ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக டில்லி அழைத்து வந்தார்.
மருத்துவ பரிசோதனைக்காக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, ராணுவ அதிகாரி வேடத்தில் இருவர் இருந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டனர்.
அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில காரணங்களைக் கூறி, ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூலித்தார். ஆனால், பணி நியமன கடிதம் எதுவும் வரவில்லை.
போனில் அழைத்தாலும் பால்விந்தர் சிங் எடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காஷ்யப், டில்லி கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் பால்விந்தர் சிங்கை தேடுகின்றனர்.