Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆம் ஆத்மியில் மீண்டும் இணைந்தார் கவுன்சிலர்

ஆம் ஆத்மியில் மீண்டும் இணைந்தார் கவுன்சிலர்

ஆம் ஆத்மியில் மீண்டும் இணைந்தார் கவுன்சிலர்

ஆம் ஆத்மியில் மீண்டும் இணைந்தார் கவுன்சிலர்

ADDED : ஜூலை 02, 2025 10:02 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:பா.ஜ.,வில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர், ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் இணைந்தார்.

டில்லி மாநகராட்சி, 50வது வார்டு கவுன்சிலர் சுமன் டிங்கு ரஜோரா. ஆம் ஆத்மி கட்சியில் இருந்த சுமன் டிங்கு, சட்டசபைத் தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு தாவினார். கடந்த மாதம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, சுமன் டிங்குவை ஆறு ஆண்டுகளுக்கு பா.ஜ., சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், தன் கணவருடன் சுமன் டிங்கு, டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் முன்னிலையில், ஆம் ஆத்மியில் மீண்டும் நேற்று முன் தினம் சேர்ந்தார்.

இருவருக்கும், கட்சியின் சால்வை மற்றும் தொப்பி அணிவித்து பரத்வாஜ் வரவேற்றார். அப்போது பேசிய சவுரவ் பரத்வாஜ், “ஏழைகளுக்காக சேவை செய்பவர்களை பா.ஜ., ஓரங்கட்டுகிறது,” என்றார்.

மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அங்குஷ் நரங், “சுமன் டிங்கு ரஜோரா மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பியது பெருமையான தருணம். ஏழைகளின் உண்மையான குரலாக ஆம் ஆத்மி இருப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

நிருபர்களிடம் சுமன் டிங்கு கூறியதாவது:

பா.ஜ.,வில் சேர்ந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு. அதற்கான மிகவும் வருந்துகிறேன். குடும்பத்துடன் ஆம் ஆத்மிக்கே திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக, பா.ஜ., அரசு ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தள்ளுகிறாது. மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டது மனநிறைவாக இருந்தது. பா.ஜ., ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us