ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளையடித்தவர் கைது
ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளையடித்தவர் கைது
ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளையடித்தவர் கைது
ADDED : செப் 14, 2025 11:03 PM
புதுடில்லி:வடமேற்கு டில்லியில், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். ஆகஸ்ட் 28ம் தேதி டில்லி வந்த அவர், கரோல் பாகில் இருந்து கர்னாலுக்கு காரில் சென்றார். வண்டியை டிரைவர் ஓட்டினார். பிரேம்பாரி புல் சிக்னலில் வண்டி நின்ற போது, பைக்கில் வந்த இருவர், சதீஷ் குமாரின் கார் கண்ணாடியை உடைத்து நகைகள் அடங்கிய பையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். காரில் நகைகளை கொள்ளையடித்த ஆகாஷ்,30, என்பதை கண்டுபிடித்து, கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
வழிப்பறி, கொள்ளை, திருட்டு மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை என 16 குற்ற வழக்குகள் ஆகாஷ் மீது நிலுவையில் உள்ளன.