-முன்னாள் எம்.பி., மகன் விபத்தில் உயிரிழப்பு
-முன்னாள் எம்.பி., மகன் விபத்தில் உயிரிழப்பு
-முன்னாள் எம்.பி., மகன் விபத்தில் உயிரிழப்பு
ADDED : செப் 14, 2025 11:02 PM

சண்டிகர்:சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான மொஹிந்தர் சிங் கைபி மகன் ரிச்சி கைபி, ஜலந்தரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
முன்னாள் எம்.பி.,யும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான மொஹிந்தர் சிங் கைபி மகன் ரிச்சி சிங் கைபி,36, நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு, ஜலந்தர் மாடல் டவுன், மாதா ராணி சவுக் அருகே டொயோட்டா பார்சூன் காரில் சென்றார்.
அதிவேகமாக சென்ற கார், முன்னாள் சென்ற இரண்டு கார்கள் மீது மோதி கவிழ்ந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ரிச்சி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்து, மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரிச்சி உயிரிழந்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உட்பட அரசியல் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.