ADDED : மே 27, 2025 09:15 PM
படேல் நகர்: மத்திய டில்லியின் படேல் நகர் பகுதியில் பட்டப்பகலில் ஒரு நாயை அடித்துக் கொன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6ம் தேதி பிற்பகல் 1:00 மணி அளவில் தெருநாய் ஒன்றை ஒருவர் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அந்த நாய் இறந்தது. இதுபற்றி தாமதமாக அறிந்த விலங்கு நல வாரிய உறுப்பினர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஒருவரை அடையாளம் கண்டு விசாரித்தனர்.
இதில் அவர், நாயை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.