
பாதுகாப்பிற்கு 1400 போலீஸ்
தேர்வு செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வல்லக்கடவு முதல் புல்மேடு டாப் வரை சுகாதார துறை சார்பில் ஒவ்வொரு இரண்டு கி.மீ. தொலைவில் ஐ.சி.யு. ஆம்புலன்ஸ், மருத்துவ குழு வசதிகள், குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தகவல்கள் அறிவிக்கப்படும். புல்மேடு டாப்பில் நாளை மறுநாள் மட்டும் பி.எஸ். என். எல். சார்பில் தற்காலிக தொலை தொடர்பு வசதி செய்யப்படும்.
கூடுதல் பஸ் வசதி
குமுளியில் இருந்து கேரள அரசு பஸ்கள் மதியம் ஒரு மணி வரை இயக்கப்படும். 65 சர்வீஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதலாக இயக்கப்படும். வல்லக்கடவு செக் போஸ்ட் வழியாக பகல் 2:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். சபரிமலையில் இருந்து புல்மேட்டிற்கு காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை செல்லலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து சபரிமலை செல்ல அனுமதி இல்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் புல்மேட்டில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.