மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பா.ஜ.,வுக்கு முழுக்கு
மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பா.ஜ.,வுக்கு முழுக்கு
மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பா.ஜ.,வுக்கு முழுக்கு
ADDED : ஜூன் 24, 2024 03:44 AM

மும்பை : மஹாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., நிர்வாகியுமான சூர்யகாந்தா பாட்டீல், அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
மஹாராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி - நந்தேத் லோக்சபா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நான்கு முறை எம்.பி.,யாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் சூர்யகாந்தா பாட்டீல்.
பின், இவர் 2014ல் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் ஹிங்கோலி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், இவருக்கு போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. அத்தொகுதி கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றி பெற்றது.
இதனால் அதிருப்தியில் இருந்த சூர்யகாந்தா பாட்டீல் நேற்று பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ''கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.,வில் இணைந்து நிறைய கற்றுக் கொண்டேன். கட்சிக்கு நன்றி,'' என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.