ஐதராபாத் அணியுடன் தோல்வி; வெளியேறியது லக்னோ அணி
ஐதராபாத் அணியுடன் தோல்வி; வெளியேறியது லக்னோ அணி
ஐதராபாத் அணியுடன் தோல்வி; வெளியேறியது லக்னோ அணி
ADDED : மே 19, 2025 11:51 PM

லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல், லக்னோ அணி வெளியேறியது.
18 வது பிரீமியர் லீக் போட்டி தொடரின் 61வது ஆட்டம், லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் லக்னோ அணியும், ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
லக்னோ அணியின் துவக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ்(65 ரன்) மற்றும் மார்க்ரம்(61 ரன்) சிறப்பான துவக்கம் தந்தனர். பின் வந்த வீரர்கள் சொதப்பிய போதும், பூரன் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் எடுக்க, லக்னோ அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
சற்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர் அதர்வா டெய்ட் 13 ரன்னில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 18 பந்தில் அதிரடி அரைசதம் விளாச, ரன் ஜெட் வேகத்தில் எகிறியது. இஷான் கிஷான் (35), அபிஷேக் சர்மா (59), கிளாசன் (47), கமிந்தா மெண்டிஸ் (32) என அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க, 18.2 ஓவரில், ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது.
வெளியேறியது லக்னோ:
இந்த தோல்வி மூலம், லக்னோ அணியின் ‛பிளே ஆப்' வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மும்பை (14 புள்ளி) அல்லது டில்லிக்கு (13 புள்ளி) 4வது அணியாக தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.