சிறுமியை கொன்று பலாத்காரம் செய்தவருக்கு உயிருள்ள வரை சிறை
சிறுமியை கொன்று பலாத்காரம் செய்தவருக்கு உயிருள்ள வரை சிறை
சிறுமியை கொன்று பலாத்காரம் செய்தவருக்கு உயிருள்ள வரை சிறை
ADDED : ஜன 06, 2024 06:54 AM
பெங்களூரு: வீட்டு முன் விளையாடிய, ஆறு வயது சிறுமியை கொலை செய்து, பலாத்காரம் செய்த வாலிபரை, உயிர் உள்ளவரை கடுங்காவல் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூரின், வீரபத்ரநகரில் ஆறு வயது சிறுமி ஒருவர், தன் பெற்றோருடன் வசித்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் அனில் பாலகர், 30, தனியாக வசித்தார். கடந்த 2017 ஏப்ரல் 20ல், சிறுமி தன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அனில், சிறுமியை டி.வி., பார்க்கலாம் என கூறி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தன் தொடை மீது அமர்த்திக்கொண்டு, தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் பயந்த சிறுமி, “வீட்டுக்குச் செல்ல வேண்டும். என்னை விடுங்கள்,” என அலறினார்.
சிறுமியை வெளியே விட்டால், நடந்ததை அவளது பெற்றோரிடம் கூறிவிடுவார் என, அஞ்சிய அனில், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அதன்பின் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையில் வெளியே விளையாடிய மகளை காணாமல், பெற்றோர் தேட துவங்கினர். அனில் வீட்டு கதவை தட்டிக் கேட்டபோது, கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக, “சிறுமியை பார்க்கவில்லை,” என, கூறினார்.
பல இடங்களில் தேடியும் மகளை காணாததால், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அனில் சிறுமியின் உடலை அட்டை பெட்டியில் மறைத்து வைத்தார். அதன்பின் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என, நண்பர்களிடம் கூறிவிட்டு தப்பியோடினார்.
சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின், இவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அதை கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டபோது, சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய கிரிநகர் போலீசார், அனிலை கண்டு பிடித்து கைது செய்தனர். பெங்களூரின் எப்.டி.எஸ்.சி., மூன்றாவது நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் அனிலின் குற்றம் உறுதியானதால், உயிர் உள்ளவரை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது.
கொலையான சிறுமியின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், 10,000 ரூபாய் அபராதமாகவும் செலுத்தும்படி அனிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.